ஒரே பரபரப்பு! திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து வந்த புகை! புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் தீ விபத்து
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, இன்று வழக்கம் போல் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த அறையில் திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து உடனே சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உள்ளிட்ட அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேறினர்.
பின்ன வெளியே வந்து பார்த்தபோது, அந்த அறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கூறுகையில், வேண்டுமென்றே தனது அறையில் பழுதான ஏசி இயந்திரம் பொருத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications