'அவரு இல்லாதப்போ வா'.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அதிகாலை 3 மணிக்கு அலறிய கணவர்.. சாட்டையை சுழற்றிய போலீஸ்
திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த கணவரை காதலனுடன் சேர்ந்துகொண்டு கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்
புதுச்சேரி: புதுச்சேரியில் லோடுமேன் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(28). இவர் இதே பகுதியில் வசித்து வந்த ஜனோவா மேரி(26) எனும் இளம்பெண்ணை காதலித்து வந்திருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் மொழி பேசி வந்துள்ளனர். இந்நிலையில், காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்பம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக காதல் தம்பதியினருக்குள் சண்டை எழுந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் இவர்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் வந்திருக்கிறது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கையில், பிரான்சிஸ் உடல் முழுவதும் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்துள்ளது.

திருமண வாழ்க்கை
மனைவி ஜனோவா மேரி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் பிரான்சிஸ் மீது பரவிய தீயை அணைத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்கிற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அதிகாலையில் மர்ம நபர்கள் இருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பிரான்சிஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்தது.

திருமணத்திற்கு மீறிய உறவு
ஆனால் உயிரிழந்த பிரான்சிஸுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. அதேபோல பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் யாரிடமும் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் யார் இப்படி செய்திருப்பார் என்கிற கேள்வி எழுந்தது. விசாரணையில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், பிரான்சிஸ் மனைவி ஜனோவா மேரி விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுத்தது மொத்த சந்தேகத்தையும் அவர் மீது திருப்பியது. எனவே அவர் மீது கறாராக விசாரணையை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை
அதாவது இவர்கள் வசித்த பகுதியை சேர்ந்த பிளம்பர் கணேசன் (26) எனும் இளைஞனுக்கும் பிரான்சிஸின் மனைவியான ஜனோவா மேரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. பிரான்சிஸ் வேலைக்கு சென்ற நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்திருக்கின்றனர். இந்த நட்பு காதலாக மாறி பின்னர் திருமணத்திற்கு புறம்பான தவறான உறவாக மாறியிருக்கிறது. இது நாளடைவில் பிரான்சிஸ் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதனையடுத்து பிரான்சிஸ் தனது மனைவி ஜனோவா மேரியை எச்சரித்திருக்கிறார். இருப்பினும் இதனைய ஜனோவா கேட்டுக்கொள்ளவில்லை.

கைது
இப்படி இருக்கையில்தான் பிரான்சிஸை கொன்றுவிட்டு நாம் தனியாக வாழ்ந்துகொள்ளலாம் என கணேசன் ஐடியா கொடுத்திருக்கிறார். இந்த ஐடியாவையடுத்து சம்பவத்தன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கணேசனும், ஜனோவா மேரியும் சேர்ந்து பிரான்சிஸ் மீதும் அவரை சுற்றியுள்ள பொருட்கள் மீதும் பெட்ரோலை ஊற்றியிருக்கின்றனர். பின்னர் தீ வைக்கப்பட்டதில் பிரான்சிஸ் கதறி துடித்திருக்கிறார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், கணேசனை ஜனோவா மேரி வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனையடுத்து தனது கணவனை காப்பாற்றுவதை போல நடித்திருக்கிறார். இந்த விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரிய வந்த நிலையில் ஜனோவா மேரி மற்றும் அவரது காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications