ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு.. இறந்து போன அண்ணன்.. தள்ளு வண்டியில் இழுத்து சென்ற தங்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் - புதுச்சேரி எல்லையான, விழுப்புரம் மாவட்டம் சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள புதுச்சேரி மாநில ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அவரது தங்கை மூலம், அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர்.
இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
வட மாநிலங்களில்தான் இப்படிப்பட்ட கொடுமைகளை நாம் பார்த்துள்ளோம். மருத்துவ வசதியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் நம்ம ஊரிலும் இப்படி என்றால் என்நதான் செய்வது.என்னய்யா கொடுமை இது.. மனிதாபிமானம் இப்படிக் கூடவா மரத்துப் போகும்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications