50 கோடி கடன்.. நடிகர் ஆனந்தராஜ் தம்பி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் பல கோடி ரூபாய் கடன் தொல்லையால் நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை (55). இவர் பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் இளைய சகோதரர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இதனிடையே இவர் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களிடம் உள்ளிட்ட பலரிடம் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று கனகசபை வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் கனகசபையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்ததும், அதில் 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சீட்டு கட்டியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு கனகசபைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த கனகசபை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கனக சபை எழுதி வைத்துள்ள கடிதத்தில் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஆனந்தராஜின் மற்றொரு தம்பி அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி, சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications