புதுச்சேரியில் அதிமுக அழைப்பு விடுத்த பந்த்..கல்வீச்சு..அன்பழகன் வீடு புகுந்து கைது செய்த போலீஸ்
புதுச்சேரி: மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. டெம்போக்கள் மீது கல்வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதலமைச்சர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் புதுச்சேரியில் சூடுபிடித்தது.

நேரு எம்எல்ஏ தலைமையில் சமூக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
இந்த பந்த் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தாண்டு கொண்டாட்ட காலம் என்பதால் வியாபாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர். வர்த்தகசபை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியாபார வர்த்தக சங்கத்தினர் பந்த் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பந்த் போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. பந்த் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சாலையில் சென்ற 2 டெம்போக்கள் மீது கல் வீசப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த 2 டெம்போக்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. இதனிடையே முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications