தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்.. வலைவீசும் புதுச்சேரி போலீசார்!
புதுச்சேரி: அதிமுக மாவட்ட செயலாளர், தேடப்படும் நபராக போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளார். நில மோசடி விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஓமலிங்கம், தேடப்படும் நபராக திருநள்ளாறு போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தக்கலூர் திருலோகசாமி கோவில் தேவஸ்தான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஓமலிங்கம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூகம் ஓமலிங்கம் வாங்கியதாக அவர் மீது திருநள்ளாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ ஓமலிங்கம், போலி ஆவணம் மூலம் கோவில் இடத்தை வாங்கியது உறுதி செய்யப்பட்டது. போலி ஆவணம் மூலம் பட்டா தயாரித்து விற்றதாக காரைக்காலை சேர்ந்த நித்தியானந்தம், சிவக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணம் மூலம் பட்டா தயாரித்து விற்ற காரைக்காலை சேர்ந்த நித்தியானந்தம், சிவக்குமார் ஆகியோரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து காரைக்கால் சிறையில் அடைத்துள்ளனர். காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஓமலிங்கம் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், நில மோசடி விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஓமலிங்கத்தை தேடப்படும் நபராக அறிவித்து, அதற்கான நோட்டீஸை திருநள்ளாறு போலீசார் அனுப்பி உள்ளனர்.
காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளர் ஓமலிங்கம், தமது கட்சியினரோடு நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications