CBI விசாரணையா? CPI விசாரணையா? குழம்பிய கட்சியினர்! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய பதாகை
புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் CBI விசாரணை வேண்டும் என்பதற்கு பதில், CPI விசாரணை வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகைகளை அதிமுகவினர் ஏந்தியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முதலில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 57 அக உயர்ந்திருக்கிறது.. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 57 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இருப்பினும் விஷ சாராய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே இதனை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 'CBI' விசாரணை வேண்டும் என்பதற்கு பதிலாக 'CPI' விசாரணை வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகையை அதிமுகவினர் ஏந்திருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலர் கட்சி நிர்வாகிகளை விமர்சித்துள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தாலும், கரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. எனவே, அவர் தலைமறைவாக இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications