அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!
புதுச்சேரி: 2026 சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என சொன்னாலும் பாஜக அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் புதுச்சேரி அதிமுக தொண்டர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அக்கட்சிக்கு வரும் தேர்தலில் வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது தான்.
2026 சட்டசபை தேர்தல் தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணிக்கு தலைமை என சொல்கிறது. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தான் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜெயலலிதா காலத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் போயஸ் கார்டனில் தவம் கிடந்த காலம் போய், தற்போது எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கிட்டு பட்டியலுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு வருவது அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
புதுச்சேரி தேர்தல்
இந்த நிலையில் இதே நிலைதான் புதுச்சேரியிலும் நீடிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். இரண்டு முறை ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கு புதுச்சேரியில் தற்போது இரண்டு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை, 1974ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.
பாஜக அதிமுக கூட்டணி
அப்போது அதிமுகவை சேர்ந்த ராமசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். எனினும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த ஆட்சி வெறும் 21 நாட்களிலேயே கவிழ்ந்தது. பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ராமசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த ஆட்சி சுமார் ஒரு ஆண்டே நீடித்தது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தன.
காங்கிரஸ்-திமுக கூட்டணி
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பின்னர் சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தொகுதி பங்கீடு
அப்போது என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக போட்டியிட்டன. அந்த தேர்தலில் மொத்தம் 16 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி
இந்த முறை நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் புதிதாக இணைந்துள்ள ஒரு கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் அதிருப்தி
இதனால், புதுச்சேரியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு முறை ஆட்சியை பிடித்த வரலாறு கொண்ட அதிமுகக்கு இவ்வளவு குறைந்த தொகுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கூட்டணியில் முக்கிய பங்காற்றிய கட்சிக்கு இவ்வாறு குறைந்த இடங்கள் வழங்கப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications