கொரோனாவை ஒழிக்க பாப்ஜி அப்பளம்...சாட்சாத் அதே அர்ஜூன்ராம் மேக்வால் புதுவை பாஜக தேர்தல் பொறுப்பாளர்!
புதுச்சேரி: கொரோனாவை ஒழிக்க பாப்ஜி அப்பளம் சாப்பிடுங்க என பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சை அமைச்சர்
புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக மற்றொரு மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் பாப்ஜி அப்பளம் மூலமாக சர்ச்சைகளில் அடிபட்டவர்தான் இந்த அர்ஜூன்ராம் மேக்வால்.

கொரோனா மருந்துகள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம்.. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதில் படுதீவிரமாக முயற்சித்த காலம். அப்போதுதான் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியது.

அர்ஜூன் மேக்வால் வீடியோ
பதஞ்சலி சர்ச்சை முடிவதற்குள் கோமியம் குடித்தால் கொரோனா சரியாகிவிடும் என ஒரு தரப்பு பிரசாரம் செய்தது. இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில்தான் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

கொரோனாவை ஒழிக்கும் அப்பளம்
அந்த வீடியோவில் ராஜஸ்தான் நிறுவனம் ஒன்று தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தினார் அர்ஜூன்மேக்வால் ராம். அத்துடன் நிற்காமல் இந்த பாப்ஜி அப்பளத்தை சாப்பிடுங்க.. கொரோனா ஒழிந்துவிடும்..பாப்ஜி அப்பளத்துக்கு அந்த சக்தி இருக்கிறது எனவும் பேசி இருந்தார் அர்ஜூன்ராம் மேக்வால். மத்திய அமைச்சர் ஒருவரே இப்படி பேசியது பெரும் சர்ச்சையானது. அடுத்த சில மாதங்களிலேயே அவரையும் கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது. அந்த சர்ச்சைக்குரிய அர்ஜூன்ராமேக்வால்தான் இப்போது புதுச்சேரி சட்டசபைக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications