புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு; நமச்சிவாயத்துக்கு சீட்!
புதுவை: புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லாஸ்பேட்டை தொகுதியில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக 20 தொகுதிகளை பெற்றது. தமிழகத்தில் அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அதிமுக-பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளன.

அங்கு அதிமுக-பாஜக இடையே தொடர்ந்து தொகுதி சிக்கல் நீடித்து வந்தது. .பாஜக, அதிமுகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க முடிவெடுத்ததால் புதுவை அதிமுக நிர்வாகிகள் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக புதுவையில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவும் புதுவையில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துளளது. காங்கிரசில் இருந்து பாஜக வந்த நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
புதுவை 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல்:-
- மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்
- லாஸ்பேட்டை - சாமிநாதன்
- திருநள்ளாறு - ராஜசேகர்
- நிரவி - மனோகர்
- காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்
- காமராஜ்நகர் - ஜான்குமார்
- நெல்லித்தோப்பு - ரிச்சர்ட்
- ஊகடு - சாய் ஜெ.சரவணகுமார்
- மணவெளி - ஏம்பலம் செல்வம்
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications