புதுச்சேரியில் ரங்கசாமியின் ஜாதக அரசியலால் வினை.. பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான்குமார் ஆதரவாளர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி வழங்கக் கோரி ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அம்மாநில பாஜக அலுவலகத்தை சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடைசி நேரத்தில் கவிழ்த்தவர் ஜான்குமார். பின்னர் பாஜகவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜான்குமார் எப்படியும் அமைச்சராகிவிடுவோம் என கனவு கண்டார்.

பாஜகவுக்கு 2 அமைச்சர்கள்
புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் பதவிதான் என்பதில் உறுதியாக இருந்தார். இதனடிப்படையில் சபாநாயகர் பதவி பாஜகவுக்கு கிடைத்துவிட்டது.

ரங்கசாமியின் ஜாதக அரசியல்
இதனிடையே தமது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை எம்.எல்.ஏக்களின் ஜாதகங்களை வைத்து ஆலோசித்து வருகிறாராம் ரங்கசாமி. இந்த ஜாதக அரசியலில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போவதில்லை என தெரியவந்தது.

போராடியும் பயனில்லை
அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் ஒரு ஆட்சியையே கவிழ்த்து பாஜக எம்.எல்.ஏ.வானோம்.. இப்போது அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விடுமோ, எல்லோருக்கும் போல தமக்கும் பாஜக துரோகம் இழைக்குமோ என்கிற பதைபதைப்பில் டெல்லியில் டேரா போட்டுள்ளார் ஜான்குமார். ஆனால் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்பது தெரிந்துபோய்விட்டது.

பாஜக அலுவலகம் சூறை
இதனால் கொந்தளித்து போன ஜான்குமாரின் ஆவரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பாஜக அலுவலகத்தின் கேட்டையும் அடித்து உடைத்து துவம்சம் செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். பாஜக தலைமையை கண்டித்தும், உடனடியாக ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியுல் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
-
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications