புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க சதியா?
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் கொண்ட குழுவினர், துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதேபோன்று ரயில் நிலையத்திலும் இரண்டு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி புதுச்சேரியில் குடியரசுத் தினம் கோலாகலமாக கொண்டாட்டப்பட உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications