புற்றுநோயை உருவாக்கும் "பிங்க்" நிற பஞ்சு மிட்டாய்.. தப்பி தவறி கூட வாங்காதீங்க! கிளம்பிய புது பூதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் புற்றுநோயை உருவாக்கும் பிங்க்' நிற பஞ்சு மிட்டாய் விற்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலம் மோசம் அடைந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து போலீசார் அங்கே சில பஞ்சு மிட்டாய்களை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கார்சினோஜென் : இதில் 'பிங்க்' நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கார்சினோஜென் கெமிக்கல்கள் இதில் இருந்ததாக கூறப்படுகிறது. கார்சினோஜென் என்பது புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் தொகுப்பு ஆகும்.
மொத்தமாக புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் கார்சினோஜென் என்று அழைக்கப்படும். புகையிலையில் உள்ள குறைந்தது 70 இரசாயனங்கள் உங்கள் டிஎன்ஏவை சேதப்படுத்துவதன் மூலம் புற்றுநோயை உண்டாக்குவதாக அறியப்படுகிறது. இதில் உள்ள பொருட்கள் கார்சினோஜென் என்று அழைக்கப்படும்.
கல்நார், நிக்கல், காட்மியம், ரேடான், வினைல் குளோரைடு, பென்சிடின் மற்றும் பென்சீன் போன்ற கெமிக்கல்கள் கார்சினோஜென் வகையை சேர்ந்தவை. இந்த கெமிக்கல்கள் அடங்கிய புற்றுநோயை உருவாக்கும் பிங்க்' நிற பஞ்சு மிட்டாய் விற்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து புதுச்சேரி, சென்னையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புற்றுநோய் மருந்து: வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.
கேன்சர் மருந்து: கடந்த வருடம் கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது
அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது,. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர்.
மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் positron emission tomography என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு ஆராய்ச்சி ; இந்த நிலையில்தான் இன்னொரு ஆராய்ச்சியில் இதேபோல் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து.. அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ இமேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சாய மூலக்கூறை வைத்துதான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மூலக்கூறியில் இருக்கும் அணுக்கள் ஒரே மாதிரியாக அதிர்வுறும் குணம் கொண்டவை. சில ஒளி தூண்டுதலுக்கு இவை ஒரே மாதிரியாக ஒத்திசைவோடு அதிரும். இப்படி ஒரே மாதிரியாக அதிர்வுறும் மூலக்கூறுகள் பிளாஸ்மோன் என அழைக்கப்படும்,
இந்த பிளாஸ்மோன் கேன்சர் செல்கள் மீது வைக்கப்படும் போது .. அது அகச்சிவப்பு ஒளியால் தூண்டப்படும்போது, புற்றுநோய் செல்களின் செல் சவ்வு சிதைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய் பலியாகிவிடும் என்கிறார்கள். நேச்சர் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த முறை 99 சதவீத செயல்திறனைக் கொண்டு இருந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த முறையில் 99 சதவிகித புற்றுநோய் செல்கள் மாறுகின்றனர். மேலும் மெலனோமா கட்டிகளைக் கொண்ட எலிகள் பாதி சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக குணமடைகின்றன. முற்றிலுமாக இவை புற்றுநோயற்றதாக மாறி உள்ளது.
கிட்டத்தட்ட இந்த செல்கள் ட்ரில்லிங் மிஷின் போல செயல்பட்டு கேன்சர் செல்களை 99 சதவிகிதம் வரை கொன்று கேன்சரை குணப்படுத்துகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications