'அம்மா' மறந்துடாதீங்க.. தவிப்போடு வந்த வேட்பாளர்கள்.. வழியனுப்பிய மக்கள்.. இதுதான் புதுச்சேரி
புதுச்சேரி: மச்சான் மறந்துடாத.. அம்மா பாத்துமா.. அக்கா யோசிங்க.. தம்பி நமக்கு தானே... என மொத்த வேட்பாளர்களும் இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் புதுச்சேரி வாக்காளர்களை மொய்த்து முற்றுகையிட்டதால் யாருக்கு ஓட்டு போடுவது என்று புதுச்சேரி வாக்காளர்கள் சற்று குழம்பித்தான் போய் இருப்பார்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்தும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்தும் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரம் செய்தார்.

இதேபோல் நாராயணசாமியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் உப்பளம், உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரி நகர் பகுதிகள் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி நகர் முழுவதும் தீவிரமாக இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி நகரமே வேட்பாளர்களின் முற்றுகையால் நெரிசலில் திணறியது.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications