பொதுப்பணித்துறை பொறியாளர் மீது சரமாரி தாக்குதல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுபணித்துறை இளநிலை பொறியாளர் மீது 4 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (54). புதுச்சேரி அரசு பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 9 ந்தேதி பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் செல்வராஜ் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது சக்திநகர் பகுதியில் சென்ற போது, 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.
பின்பு அந்த கும்பல், ஆயுதங்களால் செல்வராஜை சரமாரியாக தாக்கியது. இதில் செல்வராஜிக்கு தலை, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு அந்த கும்பல் தப்பியோடியது. சாலையில் மயங்கி கிடந்த செல்வராஜை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து செல்வராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் பொறியாளரை மர்ம கும்பல் ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications