புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
புதுவை: புதுச்சேரி சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அடுத்த 5 மாத செலவினங்களுக்காக ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசிடம் பட்ஜெட் விவரங்களை தாக்கல் செய்து ஒப்புதல் கிடைத்த பிறகே தாக்கல் செய்யப்படுவதும் நடைமுறைக்கு கொண்டு வருவதும் புதுவையில் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசும் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தது. எனினும், கடந்த ஆண்டு மார்ச் 9-ந் தேதி முதல்வர் ரங்கசாமி 2023-24-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
இதனால், 2024-2025- நிதி ஆண்டிலும் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, இன்று காலை 9.45 மணிக்கு சட்டசபை கூடியது.
சட்டசபை கூடியதும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த 5 மாத செலவினங்களுக்காக ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாதது மக்களுக்கு செய்யும் துரோகம் என குற்றம்சாட்டி புதுவை சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு புதுவை சட்டசபையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் முதல்வரை பார்க்க வரும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications