வெளியானது லிஸ்ட்.. புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்
புதுச்சேரி: ஒரு பக்கம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட உள்ள 25 தொகுதிகள் பட்டியல் இன்று வெளியான நிலையில், புதுச்சேரியில் அந்த இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகின்றன என்ற விவரம் இன்று, வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக பெரும் இழுபறி நிலையில் இருந்தது.

இன்று அது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
தொகுதிகளில் பெயர் பட்டியல் இன்று இரவே வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை நடந்த தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 தொகுதிகளில் இப்போது களம் காண்கிறது. 9 இடங்களில் போட்டியிட்ட திமுக இப்போது, 13 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக குறைந்தபட்சம் 15 தொகுதிகள் கேட்டதால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்தது.
திமுக, பாஜக போட்டியிடக்கூடிய தொகுதிகளில் எதிர்த்து களமிறங்கவும், காங்கிரஸ் கட்சி என்ஆர் காங்கிரஸ் களமிறங்கும் தொகுதியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications