உருட்டுக்கட்டை, கம்பு.. ஆயுதங்களுடன் தாக்க முயன்ற பாஜகவினர்.. புதுச்சேரியில் வெடித்த மோதல்!
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த வந்த நிலையில், பாஜகவினர் கட்டை, கம்புகளுடன் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் மோதல் வெடித்தது.
டெல்லியில் நடைப்ற்று வரும் உலக ஏஐ மாநாட்டின்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாட்டு வளாகத்திற்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து புதுச்சேரி பாஜக இளைஞர் அணி தலைவர் ஆடலரசன் தலைமையில், காங்கிரஸ் தலைமை அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பாஜக அலுவலகம் முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். பாஜக அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, அங்கு பாஜகவினர் கட்டை, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிந்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications