ராகுல் காந்தி பதவி நீக்கம்.. புதுவையிலும் காங். போராட்டம்! நாராயணசாமி தலைமையில் 100 பேர் கைது
புதுச்சேரி: ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்கியதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது தங்களுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடைப்பயணம், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை என தொடர்ச்சியாக ராகுல் காந்தி தீவிர அரசியலில் இறங்கினார். மத்திய அரசின் மீதான விமர்சனங்கள் கூர்மையடைய தொடங்கின. இந்நிலையில் மறுபுறம் இவர் மீதான வழக்குகளும் இறுதி கட்டத்தை நெருங்கியது.
அதாவது 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது லலித் மோடி, நீரவ் மோடி போன்றவர்கள் மீதும் பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது மோடி குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தீர்ப்பு
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்றும், தீர்ப்பு வாசிக்கப்படும்போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, 23ம் தேதி நீதிபதி ஹெ.ஹெ.வர்மா தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் ராகுல்காந்தி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு அதிருப்தி தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தகுதி நீக்கம்
இந்நிலையில் இதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 24ம் தேதியன்று ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. காரணம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்தான். இந்த சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்எல்ஏ அல்லது எம்பி என யாராக இருந்தாலும் அவர்கள் அந்த பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில்தான் ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதில் அதிருப்தியில் இருந்த காங்கிரசார், இந்த தகுதி நீக்க நடவடிக்கையால் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சத்யாகிரகம்
இன்று காலை டெல்லி ராஜ்கோட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், இதனை மீறி பிரியங்கா காந்தியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதில் பேசிய கார்கே, "இது வெறும் தொடக்கம்தான். இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படும். பாஜகவுக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தைரியம் கிடையாது அதனால்தான் குஜராத்தில் உள்ள சூரத்தில் அவர்கள் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்" என்று விமர்சித்திருந்தார்.

புதுச்சேரியிலும் போராட்டம்
இதனையடுத்து புதுச்சேரியிலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளார். இதில் பங்கேற்ற நாராயணசாமி உட்பட 100 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்தாலும் அடுத்தடுத்த நாட்களில் போராட்டம் தொடரும் என நாராயணசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தங்கியிருந்த அரசு குடியிருப்பை காலி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications