கடலுக்குள் இருந்து வந்த காதல் ஜோடி.. 50 அடி ஆழத்தில் நடந்த திருமணம்.. பின்னணியில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் 50 அடி ஆழத்தில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டனர். கடல் தண்ணீருக்குள் நீச்சலடித்தபடி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு அவர்கள் கூறிய தகவல் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

தற்போது ஒவ்வொருவரும் தங்களின் திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். சிலர் அதிக செலவில் திருமணத்தை நடத்துகின்றனர். இன்னொரு தரப்பினர் செலவை குறைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

puducherry marriage

அதேபோல் சிலர் தங்களின் திருமணத்தில் செடிகள் வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது புதுச்சேரியில் ஒரு வினோத திருமணம் நடந்துள்ளது.

அதாவது காதல் ஜோடி ஒன்று கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர். இப்படி திருமணம் செய்து கொண்ட ஜோடியின் பெயர் அரவிந்த் தருண்ஸ்ரீ - தீபிகா. இதில் அரவிந்த் தருண்ஸ்ரீ சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தீபிகா ஆழ்கடல் பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

அதேபோல் இருவருக்கும் இயற்கை மீதான காதல் என்பது அதிகம். இதனால் காற்று மாசுவை தடுக்கவும், காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா கிளைடிங் செய்து இந்த ஜோடி இதற்கு முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் அடுத்தப்படியாக கடல் மாசுபடுவதை தடுத்து, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.

தீபிகா மற்றும் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் புதுச்சேரி கடலுக்கடியில் திருமணம் செய்து கொண்டனர் புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. இருவரும் திருமணத்துக்கான உடை, மாலை அணிந்து கடலில் குதித்தனர். அதன்பிறகு கடலுக்கடியில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதுதொடர்பான வீடியோ இப்போது இணைதயளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக தீபிகா கூறுகையில், ‛‛நாங்கள் கடலுக்கடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதேபோல் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம்'' என்றார். அதேபோல் தருண்ஸ்ரீ கூறுகையில், ‛‛கடல்வாழ் உயிரினங்கள் இப்போது அழித்து வருகின்றன. அதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடலுக்கடியில் திருமணம் செய்தோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+