புதுச்சேரில இதெல்லாம் “சகஜமோ?” கொஞ்சம் “அட்வைஸ்” பண்ணுங்க தனுஷ்.. ரசிகரின் “பீர்” அபிஷேகம்
புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடித்து இருக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் பேனருக்கு ரசிகர்கள் பால் மட்டுமின்றி பீர் ஊற்றி அபிஷேகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து இன்று நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
நடிகையாக இந்துஜாவும், நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்து இருக்கிறார்கள். நாளை பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் நிலையில் இப்படத்தின் மீதான நம்பிக்கையால் இன்று இதை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திரைக்கதை எழுத அவரது சகோதரரும் முன்னணி இயக்குநருமான செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். தொடர் தோல்விப்படங்களை கொடுத்து வந்த செல்வராகவன் இதில் வெற்றி பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இன்று ரிலீஸ்
இந்த நிலையில்தான் இன்று காலை சிறப்புக்காட்சிகள் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் திரையிடப்பட்டன. தனுஷ் ரசிகர்கள் திரையங்குகளின் முன்பாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படம் பார்த்து வந்த பொதுமக்களும், ரசிகர்களும் அருமையாக இருப்பதாக விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி கொண்டாட்டம்
புதுச்சேரியிலும் நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீசை கொண்டாடும் வகையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பேனர்களை கட்டி ஆடி பானி கொண்டாடினர். வழக்கம்போல் பேனரில் உள்ள தனுஷ் படத்துக்கு பால் பாக்கெட்டுகளில் பாலாபிஷேகம் செய்தனர்.

பீர் அபிஷேகம்
அதில் ஒரு ரசிகர் கையில் சூடம் ஏற்றியும், மற்றொரு ரசிகர் பீர் பாட்டியலை பீச்சி அடித்து தனுஷ் படத்துக்கு பீர் அபிஷேகம் செய்தார். அங்கிருந்த மேலும் சில ரசிகர்கள் தனுஷ் படம் வெற்றிபெற வேண்டி தேங்காய் உடைத்தனர். ரசிகர்கள் தியேட்டர்களின் முன்பு மேலதாளத்துடன் நடனமாடியதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications