Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளுறுப்பில் காயம்.. "கை, காலை கட்டிப்போட்டு, பச்ச புள்ளப்பா".. புதுச்சேரி பிஞ்சு.. ஈரக்குலை உதறுது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த, ஸ்பெயின் நாட்டு பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் நம்ம தேசத்தின் இளைஞர்கள்.. இந்த அசிங்கத்திலிருந்தே இன்னும் நம்மால் வெளியே வரமுடியாத சூழலில், அதற்குள் இன்னொரு அதிர்ச்சி புதுச்சேரியில் நடந்துள்ளது.

அந்த சிறுமிக்கு 9 வயதுதான் ஆகிறது.. சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்.. அங்கிருக்கம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.. கடந்த சனிக்கிழமை, வழக்கம்போல தெருவில் நண்பர்களுடன் விளையாடுவதற்காக சென்றார்.

Did Puducherry girl attack severely and What does the post mortem say in the Puducherry Girl Murder case

ஆனால், சாயங்காலம் நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால், பதறிப்போன பெற்றோர், பல தங்கள் மகளை தேடினார்கள்.. எங்குமே குழந்தை கிடைக்கவில்லை. அதனால், முந்தியால்பேட்டை போலீசுக்கு சென்று புகார் தந்தார்கள்.

சிறுமி கொலை : போலீசாரும், அந்த புகாரின்பேரில் விசாரணையை ஆரம்பித்தது.. சிறுமி விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து வந்தார்கள் போலீசார்.. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. எந்தவிதமான க்ளூவும் போலீசுக்கு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், அங்கிருக்கும் அம்பேத்கர் நகர் சாக்கடையில் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் வந்தது.. உடனே அங்கு விரைந்த போலீசார், சாக்கடையில் எப்படி இவ்வளவு பெரிய மூட்டையை வீசியிருக்க முடியும் என்ற சந்தேகத்தின்பேரில், அந்த மூட்டையை திறந்து பார்த்தனர்..

மூட்டைக்குள் சிதைந்து போயிருந்தாள் அந்த குழந்தை.. கை, கால்கள் உடைந்துபோய் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன.. உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் தென்பட்டன.. சடலத்தை மூட்டையிலிருந்து பிரித்து வெளியே எடுக்கும்போதே, இதயமே வெடித்து கதறினார்கள் பெற்றோர்களும், உறவினர்களும்.
சிறுமி சடலம்: மூட்டைக்குள் கிடந்த சிறுமியின் சடலத்தை பார்க்க பொதுமக்களும் திரண்டுவந்துவிட்டார்கள்... இதனால், சிறுமி விவகாரம், நாலாபக்கமும் பரவ துவங்கியது.. மற்றொருபுறம், தமிழ்நாட்டுக்கு குழந்தைகள் கடத்தும் கும்பல் ஒன்று வந்துவிட்டதாக இன்னொரு தகவல்கள் தீயாய் பரவின..

இதற்கு நடுவில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யுங்கள் என்று, குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசாரும், அதிகாரிகளும் எவ்வளவோ சொல்லியும், உறவினர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.. சாலைகளில் அவர்கள் உருண்டு புரண்டு கதறினார்கள்.. இதனால் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது..

ஆவேசம்: அப்போதும் ஆவேசம் அடங்காத பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட போனார்கள். ஆனால், வேறுவழியின்றி போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.. இதனால், புதுச்சேரியே கொழுந்துவிட்டு எரிந்தது.. சோஷியல் மீடியாவில் இந்த செய்தி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்த துவங்கியது.

பின்னர் போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தினார். சிறுமி தெருவில் எப்போது விளையாடி கொண்டிருந்தார்? அவரை அழைத்து சென்றது யார்? இதன் பின்னணியில் வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்ற ரீதியில் விசாரணையை துவங்க முற்பட்டனர்.
அந்த நேரத்தில்தான், ஒரு ஆடியோ வெளியானது.. கொலை செய்யப்பட்ட சிறுமியின் அப்பா, இந்த ஆடியோவில் பேசியிருந்தார்.. "கஞ்சா குடிக்கிங்க 7 பேரும் சேர்ந்து, கை, கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது" என்று பெற்ற தந்தையின் கதறலை கேட்டு புதுச்சேரியே விக்கித்து போனது.

விசாரணை: சிறுமியை கொன்றது குழந்தை கடத்தும் கும்பலா? அல்லது கஞ்சா அடிக்கும் இளைஞர்களா? என்பது தெரியாமல், போலீசார் இந்த கொலை குறித்து விசாரிக்க துவங்கினர்.. சம்பந்தப்பட்ட பகுதியை, ஒட்டுமொத்த போலீசாரும் ரவுண்ட் அப் செய்தார்கள்.. அதே ஏரியாவில் துப்பு துலக்கவும் துவங்கினார்கள்.. சந்தேகத்தின்பேரில் 7 பேரை பிடித்து, நேற்று இரவெல்லாம் விடிய விடிய விசாரித்தனர்..

இறுதியில் 2 அயோக்கியர்கள் சிக்கினார்கள்.. ஒருவர் பெயர் கருணாஸ்.. இந்த இளைஞனுக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறது.. இவருக்கு உடந்தையாக இருந்தவர் பெயர் விவேகானந்தன்.. இவருக்கு 60 வயதாகிறது..

பாலியல் வன்கொடுமை: இந்த 20-ம், 60-ம் சேர்ந்துதான், அந்த பிஞ்சுவை கடத்தியிருக்கிறார்கள்.. விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்களாம்.. அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது விவேகானந்தன், தான்தான் முதலில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

உடனே 2 பேருமே சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்ய முயன்ற போது சிறுமி கதறி அழுதிருக்கிறாள்.. உடனே ஆத்திரமடைந்த இருவருமே சிறுமியை அடித்திருக்கிறார்கள்.. இதில்தான் சிறுமி உயிரிழந்துவிட்டாளாம். 2 பேரும் சேர்ந்து சடலத்தை மூட்டை கட்டி சாக்கடையில் கொண்டுவந்து வீசிவிட்டு போயிருக்கிறார்கள்.. இவ்வளவு விஷயத்தையும், சம்பந்தப்பட்ட 2 பேருமே வாக்குமூலமாக தந்துள்ளார்கள்.

கருணாஸ்: இதில் கொடுமை என்னவென்றால், கடந்த 2 நாட்களாகவே போலீசாருடன் சேர்ந்து சிறுமியை தேடிக் கொண்டிருந்தாராம் இந்த கருணாஸ்.. இப்போது இந்த வழக்கு போக்சோவுக்கு மாறியுள்ளது..

தற்போது அந்த குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் நடந்து முடிந்துள்ளது.. சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதும் உறுதியாகி உள்ளது.. சிறுமியின் உள்ளுறுப்பில் காயம் இருந்ததும் போஸ்ட் மார்ட்டமில் தெரியவந்துள்ளது.

செய்யப்போகிறார்கள்.. இந்த போஸ்ட் மார்ட்டம் முடிந்துள்ள நிலையில், கொலை வழக்குடன் போக்சோ பிரிவையும் சேர்க்க போலீசார் தயாராகி வருகின்றனர்.. கருணாஸ், விவேகானந்தன் 2 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய உள்ளது.

போக்சோ சட்டம் பாய்ந்தால் மட்டும் என்ன??? நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. வடமாநிலங்களில்தான் இப்படி ஒரு கொடுமைகள் நடந்து வருகிறதென்றால், நம்முடைய தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு அக்கிரமம் அதிகரித்து கொண்டிருக்கிறது.

போக்சா: ஒருபக்கம் பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இதுபோன்ற புகார்களில் சிக்கி அதிர்ச்சியை தருகிறார்கள்.. இன்னொருபக்கம், பெண்களே சில சமயம் போக்சோ சட்டத்தில் கைதாகி, அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துவிடுகிறார்கள்.

பச்சிளம் குழந்தையாக இருந்தாலும்சரி, வயதான கிழவியாகவே இருந்தாலும்சரி, அவள் ஒரு "பெண்ணா"க மட்டுமே இருந்தால் போதும் என்றாகிவிடுகிறது இதுபோன்ற காம பிண்டங்களுக்கு... இந்த வெறிபிடித்த மிருகங்களின் கண்களுக்கு வயது தெரியவதில்லை.. உறவுமுறை தெரிவதில்லை.. உலகமறியா பிஞ்சுகளின் எதிர்காலத்தையே நாசமாக்குகிறோமே என்ற அச்சமும் இருப்பதில்லை.

போக்சோ சட்டங்கள்: இதுபோன்ற கொடூரரர்களுக்கு போக்சோ சட்டங்கள் தரும் தண்டனைகள் நமக்கு ஆறுதலை தந்துவருவதை மறுக்க முடியாது.. ஆனால் அதேசமயம், போதுமான பலனை போக்சாவின் தண்டனைகள் பெற்று தரவில்லையோ என்றே தோன்றுகிறது..

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது "ஆண்மை நீக்கம்" செய்யப்படுவதாக மடகாஸ்கர் நாடு அதிரடியாக சட்டம் ஒன்றை சமீபத்தில் இயற்றியிருந்தது. கிட்டத்தட்ட இதுபோன்ற அதிரடிகளை இங்கு எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

தண்டனை: சுருக்கமாக சொல்லப்போனால், பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுக்கு, போக்சோவைவிட இன்னும் கொடுமையான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் இங்கு உடனடி நம்மிடம் தேவையாக இருக்கிறது...!!

எனினும், "கை, கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கை புள்ளப்பா அது" என்று பெற்ற வயிறு அங்கே பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கிறது.. புதுச்சேரி உட்பட தமிழகத்தின் ஈரக்குலையையே உலுக்கி எடுத்து வரும் அந்த கதறலுக்கு யார் பதில் சொல்வது???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+