தமிழ்நாடு ரூட்டில் புதுச்சேரி! ஆளுநர் தமிழிசை தேநீர் விருந்து.. திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு
புதுச்சேரி: தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
Recommended Video
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழகத்திலும் கிட்டதட்ட அதேநிலை தான்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை.

தமிழக அரசு
தமிழ அரசு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. நீட் விலக்கு தொடங்கி 11 தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை திமுக எம்பிகள் நாடாளுமன்றத்திலும் எழுப்பி இருந்தனர். மேலும் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேநீர் விருந்து
இந்தச் சூழலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை அறிவித்திருந்தார். இருப்பினும், இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதேபோல திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதேநேரம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றன.

புதுச்சேரி
இதற்கிடையே தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் ஆளுநர் மாளிகை சார்பில் தேநீர் விருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

புறக்கணிப்பு
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. புதுச்சேரிக்குத் தேவையான நிதியை மாநில அரசிடம் இருந்து பெற்றுத் தர ஆளுநர் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications