Exclusive: எனது கவலையெல்லாம்.. என் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே -சந்திர பிரியங்கா..!
புதுச்சேரி: தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை முறையாக பயன்படுத்தி புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உழைப்பேன் என உறுதி அளித்திருக்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர பிரியங்காவிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசிய போது பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
அதன் விவரம் பின்வருமாறு;

புதுச்சேரி அரசு
''சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கூடியவர். எனக்கு புதுச்சேரி அமைச்சரவையில் இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் ஒரு வித கவலையையும் தந்துள்ளது. ஆம், என் மீதான நம்பிக்கையை காப்பாற்றி எனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.''

அமைச்சரவை
''இன்னும் போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஓரிரு நாட்களில் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எந்த துறையானாலும் சரி அந்த துறையின் மூலம் புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு உழைப்பேன். தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இங்கு மக்கள் எளிதாக எங்களை இங்கு அணுகமுடியும். தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும் எனக்குத் தெரியும்.''

நம்பிக்கை
''புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை பொறுத்தவரை எந்தவொரு செயல்பாடுகளிலும் என்கரேஜ் தான் செய்வார், யாரையும் அவர் டிஸ்கரேஜ் செய்யமாட்டார். இதனால் எத்தகைய சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நம்பி முதலமைச்சர் தந்துள்ள இந்த பொறுப்பில் மிகச் சரியாக செயல்படுவேன்.''

விவசாயக் குடும்பம்
''எனது குடும்பத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிஸினஸ் செய்தாலும் எங்களது பிரதான தொழில் விவசாயம் தான். அப்பா சந்திரகாசு 2011-ம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இதனிடையே, நான் அரசியலில் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் விவசாயப் பணிகளை எங்கள் தோட்டத்தில் மேற்கொள்வேன். பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.''
இவ்வாறு புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ஒன் இந்தியா தமிழிடம் பேசிய போது கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications