மகனை கண்டித்த ஆசிரியர்.. நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய தந்தை!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் தாமதமாக வந்த மாணவனை கண்டித்த ஆசிரிரை, அவரது தந்தை நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கென்னடி நகரைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ். புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் ஆரோவில் திருநகரை சேர்ந்தவர் செல்வகுமார். தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் எட்வின்ராஜ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வகுமாரின் மகன் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனை கண்ட எட்வின்ராஜ் ஏன் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாதா என கேட்டு முதுகில் லேசாக அடித்துள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த மாணவன் வகுப்பில் யாரிடமும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துள்ளார்.
இதனை கண்ட எட்வின்ராஜ் ஏன் அமைதியாக உட்கார்ந்துள்ளாய் என கேட்டதற்கு, நீங்கள் என்னை கண்டித்தது மிகவும் அவமானமாக உள்ளது என கூறியுள்ளான். அதோடு விட்டுவிடாமல் பள்ளி முடிந்ததும் செல்போன் மூலம் தனது தந்தை செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே செல்வகுமார் ஆரோவில்லில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளி முடிந்து எட்வின்ராஜ் வெளியில் வந்தபோது, அவரை வழிமறித்த செல்வகுமார் குடிபோதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பெல்ட்டால் அடித்துள்ளார்.
இதுகுறித்து எட்வின்ராஜ் பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் மாணவரை கண்டித்த ஆசிரியரை, அவரது தந்தை சராமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications