தவெகவின் விசிலுக்கு ஓட்டு.. வாக்களித்ததை வீடியோ எடுத்து வம்பில் சிக்கிய விஜய் ரசிகர்.. போச்சே
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் அமைதியாக இன்று நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் விஜயின் தவெகவை சேர்ந்த ஒருவர் வாக்குச்சாவடிக்குள் செல்போனை எடுத்து சென்று விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டடதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சிக்கலில் சிக்கி உள்ள நிலையில் அவர் மீது சட்டச நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது.
மாலை 6 மணி நிலவரப்படி புதுச்சேரியில் மொத்தம் 89.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 83.4 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை கூடுதலாக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் கடந்த முறையை விட அதிகளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
விசிலுக்கு ஓட்டு போட்ட வீடியோ
இந்நிலையில் தான் தற்போது தவெகவை சேர்ந்த ஒருவர் வம்பில் சிக்கி உள்ளார். அதாவது வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தடையை மீறி ஒருவர் யாருக்கும் தெரியாமல் வாக்குச்சாவடிக்குள் தனது செல்போனை எடுத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஜயின் தவெக வேட்பாளருக்கு விசில் சின்னத்தில் அவர் வாக்களிப்பதையும், அதனை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரத்தில் விசில் சின்னம் தெரிவதையும் அந்த நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பாயப்போகும் வழக்கு
பிறகு அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினர். அதுமட்டுமின்றி தேர்தலில் விஜயின் தவெகவிற்கு வாக்களிக்கும்படி பலரும் வலைதளங்கள் வாயிலாக பிரசாரம் செய்தனர்.
இது புதுச்சேரி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கள் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து சம்பவம் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து வீடியோ எடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன?












Click it and Unblock the Notifications