போலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க!
புதுவை: புதுச்சேரியில் மாமூல் கேட்டு வணிகர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் போலீசார் மீதே தாக்குதல் நடத்திய 2 ரவுடிகளை, வில்லியனூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் அண்ணன் தம்பிகளான பாபு (37), சிவா (35) ஆகியோர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடைக்கு கடந்த 15-ம் தேதி மதியம் வந்த இருவர் மாமூல் கேட்டு கடையில் உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்
மேலும் கடை ஊழியரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரவுடி சகோதரர்களான ரவுடிகளான சாந்தமூர்த்தி மற்றும் சம்பத் ஆவர்

ஆபாச வார்தைகளால் வசை
இரு ரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறியதை அடுத்து கடை உரிமையாளர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் இதனையடுத்து சிரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல்நிலைய தலைமைக் காவலர் பாஸ்கரன், காவலர் லியோத்தி கவுசன் ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட ரவுடிகள் இருவரையும் பிடித்து செல்ல முயன்றனர் ஆனால் அவர்கள் தங்களை பிடிக்க வந்த போலீஸாரையே தகாத ஆபாச வாாத்ரதைகளால் வசைபாடியுள்ளனர் இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

போராட்டத்தில் குதித்த வணிகர்கள்
எனினும் குண்டுகட்டாக அவர்களை கைது செய்போலீஸார் இருவரும் முயற்சி செய்துள்ளனர் ஆனால் தொடர்ந்து எல்லை மீறிய வுடிகள் இருவரும் போலீஸாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர். மாமூல்கேட்டு மிரட்டிய ரவுடிகளை கைது செய்ய கோரியும், போலீஸாரின் மெத்தன போக்கை கண்டித்தும் வில்லியனூரில் வணிகர்கள் கடையடைப்பு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிர தேடலில் இறங்கிய போலீஸ்
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, ரவுடிகளை கட்டுப்படுத்த வணிகர்கள் ஒன்று சேர்ந்து ரோந்து குழுவை உருவாக்கவும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கடை உரிமையாளர் மற்றும் காவலர்களின் புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் சாந்தமூர்த்தி, அவரது அண்ணன் சம்பத், மற்றும் தாமோதரன் என்பவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

சுற்றி வளைத்து அதிரடி கைது
இந்நிலையில் சாந்தமூர்த்தி, அவரது அண்ணன் சம்பத் இருவரும் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வில்லியனூர் தனிப்படை போலீஸார், சிறப்பு அதிரடிப்படை போலீஸார் உதவியுடன் சாந்தமூர்த்தி மற்றும் அவரது அண்ணன் சம்பத் இருவரையும் கைது செய்து புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர் இதே போன்று புதுச்சேரி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டுபவர்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உடனடியாக போலீசின் இலவச எண்ணாண 100, 1030 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications