இந்த பாட்டு தான் 10 வருசமா எனது ரிங்டோன்.. தெலுங்கானாவுக்கு போனாலும் இதான்.. ஆளுநர் தமிழிசை பேச்சு!
புதுச்சேரி : "எந்த அரசியலும் இல்லாமல் முழு உணர்வோடு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி அவருக்கு புதுச்சேரி அரசு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது. பாரதிதாசன் பாடல்தான் எனது செல்போன் ரிங்டோனாக 10 ஆண்டுகளாக உள்ளது." என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாரதிதாசனின் 133வது பிறந்தநாள் விழா மற்றும் புதுச்சேரி கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பாரதிதாசன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழிசை பேச்சு : தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தனர். இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருது பெரும் வாய்ப்பு கலைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
மேலும் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடல்தான் எனது செல்போன் அழைப்பு ஒலியாக ஏறத்தாழ 10 ஆண்டுகளாக உள்ளது. தெலுங்கானாவுக்குச் சென்ற பிறகும் இதே பாடல்தான் எனது செல்போனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் இல்லாமல் : பாரதிதாசனின் தமிழை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பதில் புதுச்சேரி பெருமை கொண்டுள்ளது. இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் முழு உணர்வோடு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி அவருக்கு புதுச்சேரி பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் எப்பொழுதும் நிறைவேற்றப்படும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வருக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். தமிழ் எங்கெல்லாம் விளையாடுகிறதோ, அங்கெல்லாம் இந்த தமிழிசை இருப்பேன்" என்றார்.
முன்னதாக, கர்நாடகா மாநிலத்தில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications