Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பர்தா"வுக்கு புதுச்சேரியில் தடை?.. 9ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு.. சீருடை குறித்து தமிழிசை பேட்டி

மாணவர்கள் சீருடை குறித்து தமிழிசை சவுந்தராஜன் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்யும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்..,. அதேபோல, இது தொடர்பாக பேசிய கல்வித்துறை இயக்குநர், இஸ்லாமிய மாணவியருக்கு உடையில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த மாநிலத்தில் உடுப்பி, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பிரத்யேக ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு எழுந்துள்ளது.

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என்ற மாணவர்கள் கழுத்தில் காவி துண்டை அணிந்து கொண்டு வருகிறார்கள்...

 ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

இந்த விவகாரம் இந்தியா முழுவதும் வெடித்து கிளம்பி உள்ளது.. இதுகுறித்த வழக்கும் கோர்ட்டில் நடக்கிறது.. எனினும் நடந்த சம்பவத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு கருத்துக்களும், விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளேயே புதுச்சேரியில் வேறு ஒரு சம்பவம் நடந்துவிட்டது.. புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோயில் எதிரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

 முஸ்லிம் மாணவி

முஸ்லிம் மாணவி

இந்தப் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஒருவர், பள்ளிக்கு வழக்கம்போல் பர்தா அணிந்து வந்துள்ளார்.. கிளாஸ் ரூமுக்கள் சென்றதுமே அந்த பர்தாவை கழட்டி தன்னுடைய பையில் வைத்துக் கொள்ளுவார்... ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கத்துக்கு மாறாக பர்தாவுடன் கிளாஸ் ரூமில் உட்கார்ந்துள்ளார்... இதை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனித்துவிட்டு, மாணவியின் பெற்றோரிடம் இதுகுறித்து பேசியுள்ளார்..

பர்தா

பர்தா

ஆனால் அதற்கு பெற்றோர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவி பர்தா அணிந்துக் கொண்டு தான் கிளாசுக்கு வருவார் என்று இஸ்லாமியருக்கு ஆதரவாக சிலர் பள்ளியில் வந்து பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர் கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து மாணவிக்கு ஆதரவாகவும், ஆசிரியரின் செயலுக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்...

 தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

எனினும் அந்த போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.. அந்த அமைப்பினர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதனிடையே பள்ளிக்குச் சென்று விசாரித்த முதன்மைக் கல்வி அலுவலர் மீனாட்சி சுந்தரம், ''பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம்'' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பற்றி கொண்டு எரியும்போது, நம் புதுச்சேரியிலும் பர்தா விவகாரம் வெடித்து, அதிர்ச்சியை உண்டு பண்ணியது..

 சுடுமண் சிற்ப பூங்கா

சுடுமண் சிற்ப பூங்கா

இந்த சம்பவம் குறித்துதான், அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ஒரு பேட்டி தந்துள்ளார்.. புதுச்சேரியில் உள்ள சுடுமண் சிற்ப பூங்காவை தமிழிசை திறந்து வைத்து பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது "புதுவையில் சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது... பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறோம். சுடுமண் சிற்ப பூங்கா பூகோள ரீதியில் புதுவைக்கு பெருமை சேர்க்கும். இங்கு ரூ.5 கோடியில் 40 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

 முதலமைச்சர்

முதலமைச்சர்

ஆக்கப்பூர்வமான பல திட்டங்களால் புதுவை மேலும் வளர்ச்சியடையும். அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதிகளுக்கு சில திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் புதுவைக்கு என சில திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அரசு அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும். முதல்வரும் எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறார்..

 ஹிஜாப்

ஹிஜாப்

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பற்றி எரிகிறது.. புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதாக புகார் உள்ளது.. புதுச்சேரியின் மாணவர்களுக்கான சீருடையைப் பொருத்தமட்டில் பள்ளிக் கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

2 நாட்களுக்கு முன்பு டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சீருடைகளை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், அந்தந்த மாநில கல்வித் துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று மிக முக்கிய கோரிக்கையை கிருஷ்ணசாமி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+