டெங்குவை கட்டுப்படுத்த கொசு உற்பத்தி.. இது என்ன புதுக்கதை..? - ஐசிஎம்ஆர் விஞ்ஞானி சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : டெங்குவை கட்டுப்படுத்த கொசுக்களை உற்பத்தி செய்து புழக்கத்தில் விடும் திட்டம் தயாராகி வருகிறது. ஏற்கனவே இருக்கும் கொசுக்களின் தொல்லை போதாதென்று அரசே கொசுக்களை விடப்போகிறதா என அச்சப்பட வேண்டாம்.

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களை உற்பத்தி செய்துள்ளதாக ICMR-VCRC இயக்குனர் டாக்டர் அஷ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொசுக்கள் டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்து வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்குகின்றன. இதன் மூலம் நோய்ப் பரவலை தடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு கொசு

டெங்கு கொசு

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை ஏடீஸ் எஜிப்டை எனும் கொசுக்கள் பரப்புகின்றன. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைப் பெண் கொசுக்கள், அந்தக் கிருமியை அடுத்தவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன் மூலம் அடுத்தவருக்கும் டெங்கு பரவுகிறது. டெங்கு சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசி இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தடுப்பது ஆகியவையே நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிகளாகும்.

 புதிய வகை கொசு

புதிய வகை கொசு

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், புதுச்சேரியில் உள்ள ICMR-வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளது. இது கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. wMel மற்றும் wAlbB Wolbachia மரபணுக்களால் பாதிக்கப்பட்ட Aedes aegypti என்ற இரண்டு கொசு தொகுதிகளை உருவாக்கியுள்ளனர். இவை Ae என்று பெயரிடப்பட்டுள்ளன.

 வோல்பாச்சியா

வோல்பாச்சியா

கொசு முட்டைகளுக்கு வோல்பாச்சியா தொற்றை ஏற்படுத்துகின்றனர். இந்த வோல்பாச்சியா எனும் பாக்டீரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பானது எனவும், சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட கொசுக்கள் டெங்கு கிருமியைப் பரப்பும் தன்மையை இழக்கின்றன.

 டெங்கு பரவாத கொசுக்கள்

டெங்கு பரவாத கொசுக்கள்

வோல்பாச்சியா பாக்டீரியாக்கள் தொற்றியுள்ள ஆண் கொசுவோடு பாக்டீரியா இல்லாத பெண் கொசு இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால் அந்தப் பெண் கொசு முட்டையிடாது. பாக்டீரியா இல்லாத ஆண் கொசுவும், பாக்டீரியா உள்ள பெண் கொசுவும் இனப்பெருக்கம் செய்தால் முட்டையிடும். ஆனால், அந்த முட்டைகளில் பிறக்கிற கொசுக்களுக்குள்ளும் வோல்பாச்சியா தொற்று காணப்படும். இதனால், அந்தக் கொசுக்களில் டெங்கு வைரஸ் தொற்றாது.

ஐசிஎம்ஆர் அஷ்வனி குமார்

ஐசிஎம்ஆர் அஷ்வனி குமார்

இதுதொடர்பாக ICMR-VCRC இயக்குனர், டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், "டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக வோல்பாச்சியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களை உற்பத்தி செய்துள்ளோம். இந்த கொசுக்கள் டெங்கு கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்து வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம் நோய்ப் பரவலை தடுக்கலாம்.

அரசு ஒப்புதல்?

அரசு ஒப்புதல்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பணிகள் இப்போது முடிவடைந்துள்ளன. நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை ஆய்வகத்தில் தயார் செய்துள்ளோம். அவற்றை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். குறிப்பிட்ட கால அளவில் கொசுக்களை உற்பத்தி செய்து வெளியிட வேண்டும் என்பதால் அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 விரைவில் வருமா?

விரைவில் வருமா?

பருவமழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், அதற்கு முன்பாக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சலால் பலர் பலியாகி வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+