புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி: நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் பேரபாயத்தை குறிக்கும் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக இன்று மதியம் வலுப்பெறுகிறது. 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். கனமழை கொட்டும் என்றும், இன்று இரவு புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை இந்த எச்சரிக்கை கூண்டு குறிக்கிறது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்காலில் 8ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் கடலூரில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மீனவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் இருந்தவர்கள் முறையான அறிவுறுத்தலின்படி புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
10-ம் எண் புயல் கூண்டு ஏன்?
மிக கடுமையான புயல் துறைமுகப் பகுதியிலோ அல்லது மிக அருகிலோ கரையைக் கடக்கும் நிலையில் துறைமுகங்களில் பேரபாயம் என்பதை குறிக்கும் வகையில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்படும். காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் புதுவை, கடலூர் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications