பாஜக புது வியூகம்.. டெல்லியில் விரைவில் சர்வதேச திருக்குறள் மாநாடு: மத்திய அமைச்சர் எல். முருகன்
புதுச்சேரி: டெல்லியில் விரைவில் உலகளாவிய திருக்குறள் மாநாடு நடைபெறும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 'வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸ்: ஊக்குவிப்பு, தடுப்பு மற்றும் தலையீடு’ (Hypnosis across Lifespan: Promotion, Prevention, and Intervention) என்ற சர்வதேச மாநாட்டை இன்று தொடங்கி வைத்து அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: திருக்குறளின் கருத்துகள் நிலையானது என்றும், இந்த செவ்வியல் நூல் உலகின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு நடைபெறும்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தெரிவித்த கவலையைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், செயலிழப்பைத் தடுப்பதற்கும், சிக்கலான தருணங்களில் திறம்பட செயலாற்றுவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த, தகவமைப்பு கருவியாக ஹிப்னாஸிஸ் திகழ்கிறது. இது போன்ற மாநாடுகள் முக்கியமான உரையாடல்களை வளர்க்கின்றன. மனிதனின் வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸின் பயன்பாட்டை இதுபோன்ற மாநாடுகள் ஊக்குவிக்கின்றன.
ஹிப்னாஸிஸ் துறையில் ஆய்வுக்கான பரந்த வாய்ப்புகள் உள்ளன். இளம் வல்லுநர்கள் இந்த துறையில் ஈடுபட வேண்டும். ஒரே நாடு, ஒரே சந்தா திட்டம், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள் இந்தியாவின் ஆராய்ச்சி சூழலையும் மேம்பாட்டு சூழல் அமைப்பையும் வலுப்படுத்தும். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் யுஜிசி-மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் பஞ்ச ராமலிங்கம் எழுதிய இரண்டு நூல்களை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். அகாடமி ஆஃப் ஹிப்னாஸிஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், இந்திய உளவியல் பள்ளி சங்க தலைமைத்துவ விருதுகள் - 2024 ஆகியவற்றையும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் கே.தரணிக்கரசு இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். புதுச்சேரி சட்டசபை தலைவர் ஆர்.செல்வம், புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications