புதுவை தேர்தலில் விஜய்க்கு ஜாக்பாட்- பாஜகவிடம் இருந்து தப்பித்து கை கோர்க்கும் என்.ஆர். காங்கிரஸ்?
புதுச்சேரி: புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உதறிவிட்டு நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கை கோர்க்க ஆளும் என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலால் புதுவை அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகி உள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியைச் சேர்ந்தவர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் மிக நெருக்கமானவர். 2 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியவர் புதுச்சேரி முதல்வர் தரங்கசாமிதான்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய பேச்சை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ரங்கசாமி. இது தொடர்பாக ரங்கசாமி கூறுகையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு வந்துவிட்டார். விஜய் நினைத்திருந்தால் மேலும் பல சினிமா படங்களில் நடித்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளார் நடிகர் விஜய். இதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. நடிகர் விஜய் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்றார்.
புதுச்சேரியில் தற்போது முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு முதலே பாஜகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் முரண்பாடுகள் இருந்த போதும் தொடர்ந்து அந்த கூட்டணியிலேயே என்.ஆர்.காங்கிரஸ் நீடித்து வந்தது. தற்போது தமது ஆலோசனையின் பேரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை முதல்வர் ரங்கசாமி ஆதரிக்கதான் செய்வார்; 2026 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்கின்றன புதுவை அரசியல் வட்டாரங்கள்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications