அமைச்சராகும் உதயநிதி.. “ஓ இதான் திராவிட மாடலா?” வாரிசு அரசியல் விமர்சனத்தில் இணைந்த ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: தமிழ்நாட்டின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்து இருக்கிறார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "புதுச்சேரியில் நல்லதொரு ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. தமிழ்நாடு அரசு புதுச்சேரியில் விமான நிலையத்தை அமைக்க 300 ஏக்கர் நிலத்தை கொடுக்கட்டும். இங்கு திராவிட மாடல் ஆட்சி இல்லை.

புதுச்சேரி விமான நிலையம்
நான் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் நேரிலும், தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டிலும் சந்தித்து விமான நிலையத்தின் விரிவாக்க பணிக்காக இடம் கேட்டு இருக்கிறேன். புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மக்கள் மீது அவருக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை தரட்டும்.

ஆளுநரின் தலையீடா?
புதுச்சேரியில் எந்தவிதமான அடக்குமுறையும் நடைபெறவில்லை. துணை நிலை ஆளுநர் என்ற அடிப்படையில் நான் புதுச்சேரி அரசுக்கு துணையாகவே இருந்து வருகிறேன். ஆளுநரின் தலையீடு என்று சொல்லி வருகிறார்கள். ஆளாளுக்கு தலையிட்டு வரும் தமிழ்நாடு அரசை விட ஆளுநரின் தலையீடு எதுவும் பெரிய விசயம் கிடையாது.

பொம்மை ஆட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்தபோது ஆற்றிய உரையில் பேசிய எதுவுமே சரியில்லை. புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக அவர் கூறி உள்ளார். பொம்மை ஆட்சி நடைபெறுவது புதுச்சேரியில் அல்ல. கர்நாடகாவில்தான் பொம்மை ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழில் திராவிட மாடல் பெயர்
திராவிட மாடல் என்று சொல்கின்றார்கள். கருணாநிதியின் மகன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் என்பதை தமிழில் வைத்துக் கொள்ளட்டும்." என்றார். அவரிடம் உதயநிதி ஸ்டாலின் நாளை தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வாரிசு இல்லாமல் பதவி
இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்திரராஜன், "இதுதான் புதிய மாடலோ, என்னவோ! நாங்கள் 25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து வாரிசு இல்லாமல் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம்." என்றார். தமிழிசை சவுந்திரராஜனின் இந்த கருத்தை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் என்பதாலேயே அவருக்கு பாஜகவில் பெரிய பதவிகள் கிடைத்ததாக விமர்சித்து வருகிறார்கள்.

உதயநிதி பதவியேற்பு
நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்து உள்ளார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஏற்றுக்கொண்டார். வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறும்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications