யாரையும் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லைங்க.. பிறந்த நாளில் கிரண் பேடி பளிச் பேச்சு
புதுவை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் கிரண்பேடியின் பிறந்த நாள் ஊழியர்களால் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் யாரையும் புண்படுத்துவது தமது நோக்கமல்ல என்றார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் பிறந்த நாளையொட்டி புதுவை ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் கிரண் பேடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபட்ட கிரண்பேடி, பின்னர் கேக் வெட்டி ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புதுச்சேரிக்கு சேவை செய்வதே எனது எண்ணம். மக்களின் வரிப்பணம் மக்களுக்கு நேரிடையாக முழுமையாக சென்றடைய வேண்டும், அதுவே என் நோக்கம் என்றார்.

மேலும் பேசிய கிரண்பேடி, தனது பிறந்தநாளில் வேண்டிக்கொள்வது புதுச்சேரியை பசுமையாகவும் நீர்நிறைந்த மாநிலமாக மாற்றவேண்டும் என்பதே. இது எனது கனவு ஆகும். இதற்கு என்னோடு இணைந்து செயல்படுங்கள் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். கிரண்பேடியின் பிறந்தநாளுக்கு தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரி நந்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் ஆளுநர் மாளிகைக்குள் வந்து கிரண்பேடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

முன்னதாக கனகன் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி அங்கிருந்த பொதுமக்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முன்னதாக தனது 70வது பிறந்த நாளையொட்டி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கிரண்பேடி.

அவர் எழுதியிருந்த பிறந்த நாள் கடிதத்தில் எனது 70-வது பிறந்தநாளை, புதுச்சேரிக்கு அர்ப்பணித்துள்ளேன். புதுச்சேரியை பசுமையாக மாற்ற, நானும், கவர்னர் மாளிகை குழுவும் தொடர்ந்து பயணிக்க உள்ளோம். ஒவ்வொரு வார இறுதியிலும், ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு, மரக்கன்றுகளை நடும் பணியில், கவர்னர் மாளிகை குழு செயல்படும். இப்பணியில், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், உட்பட அனைவரும் பங்கேற்கலாம் என கூறியிருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications