மருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி
புதுவை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியின் போது மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டபடி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
Recommended Video
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் கடந்த 31-ம் தேதி பணியில் இருந்த மருத்துவர் ஆதேன் குணசேகரனுக்கும், ஆண் செவிலியர் செந்தில் என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில் மருத்துவரை தாக்கியதாக புகார் கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் பணி பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் கடந்த 2-ம் தேதி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததால் மருத்துவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்திற்கு இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் அமைதி பேரணி நடத்தப்பட்டது. ஜிப்மர் உள்ளிருப்பு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர்.

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications