அள்ளி அள்ளி வீசப்பட்ட மாம்பழங்கள்.. காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆயத்தில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. உலகப் பிரதித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் அம்மையாரே மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த சிவபெருமானுக்கு புனிதவதி அம்மையார் மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நடப்பு ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு பிச்சாடனர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பிச்சாடனர் வீதி உலா நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் சித்தாண்டவர் வேடத்தில் காரைக்கால் அமையார் ஆலயத்தில் அமுதபடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பவளக்கால் விமானத்தில் எழுந்தருளிச் சென்றார்.
அப்போது, சிந்தாந்த மூர்த்திக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான மாங்கனிகளை வீசி சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர். இந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் அந்த மாங்கனிகளை வாங்கிச் சென்றனர். பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடி, பால்கனியில் இருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசினர். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வதற்காக போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications