மிஸ்டர் முதலமைச்சரே உங்க நடத்தை சரியில்ல.. இப்பெல்லாம் ரொம்ப தரம் தாழ்ந்துட்டிங்க...கிரண்பேடி
புதுச்சேரி: மத்திய அரசின் பணியாளர் நலத்துறை மாநிலங்களின் முன்னேற்றம் தொடர்பாக நடத்திய ஆய்வில், சிறிய மாநிலங்களில் நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் முதல் இடங்களை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,
மத்திய அரசு போதிய நிதி தராத நிலையிலும், கிரண்பேடி தொல்லைகள் கொடுத்தபோதும் நாம் இந்த விருதுகளை பெற்றுள்ளோம். தடைகள் இல்லாமல் இருந்தால் புதுச்சேரியை மினி சிங்கப்பூராக மாற்றுவோம்.

பல விருதுகள் வாங்கினாலும் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளனர். இதிலிருந்து அவரின் பழிவாங்கும் போக்கு, அரசின் செயல்பாடுகளை அங்கீகரிக்காத நிலை தெரிகிறது.
கிரண்பேடி அதிகாரிகளை கூப்பிட்டு மிரட்டும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் ஒரு அதிகாரி இறந்துவிட்டார். அதிகாரம் இல்லாமலேயே அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். புதுவை மாநில அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டாலே அவர்கள் சரியாக வேலை செய்வார்கள்.

கிரண்பேடி தனக்கு அதிகாரம் இல்லாதபோது அரசை குறை சொல்வது, மக்கள்நல திட்டங்களை முடக்குவது போன்ற செயல்களை செய்கிறார் என கிரண்பேடியை கடுமையாக சாடி முதலமைச்சர் நாராயணசாமி பேசியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் என்ற கண்ணியத்தை இழந்து எல்லை மீறி பேசுவதாகவும், அதனை மாற்றிக்கொள்ள வேண்டுமெனக்கூறி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுதியுள்ள கடிதத்தில், ஆளுநரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள ஆளுநர் மாளிகையையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தரக்குறைவாக பேசுகின்றீர்.
சில தினங்களாக எல்லைமீறி கண்ணியத்தை இழந்து பேசிகின்றீர். குற்றச்சாட்டுகளை கூறும் போது அதை ஏற்க மறுக்கவில்லை எனில், அது குற்றம் சாட்டுபவரைத்தான் சாரும் என்று புத்தர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். முதல்வர் அலுவலகம் என்ற கண்ணியத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை.

அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நம்புகிறேன். துணைநிலை ஆளுநர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகின்றது. கருத்து வேறுபாடுகளை கண்ணியமான முறையில் கூற தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன் என அக்கடிதத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரோட சண்டை ஓயர மாதிரி தெரியல. இவங்க சண்டையால பாதிக்கப்படுவது என்னமோ புதுச்சேரி மாநில மக்கள்தான் என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications