புதுவை சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவை சட்டமன்றத்துக்கு தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது.

Lakshmi Narayanan has been appointed as the caretaker Speaker of the puducherry Assembly

இதில் என்.ஆர்,காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதுவை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.

இதற்கிடையே புதுவை சட்டமன்றத்துக்கு 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்துக்கு தற்காலிக சபாநாயகராக ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.லட்சுமி நாராயணனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்துள்ளார் என்று புதுவை சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. 15-வது சட்டப் பேரவைக்கான தற்காலிக சபாநாயகரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+