Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நமச்சிவாயம்".. ஏன்ணே அழறீங்க.. "தீயசக்தி"யிடம் "சாமி" இப்டி மாட்டிக்கிட்டாரே.. ஓன்னு கதறிய செல்வம்

பாஜகவின் நமச்சிவாயம் கண்ணீர் வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த சம்பவம் ஒன்று மொத்த பேரையும் கண்கலங்க வைத்து வருகிறது.. தொகுதி மாறி போட்டியிட உள்ள நமச்சிவாயமும், தொகுதியை விட்டுக்கொடுத்த டிபிஆர் செல்வமும் தனித்தனியாக கதறி கதறி அழுதுள்ளனர்.. தன்னுடைய நிர்வாகிகளுடன் இவர்கள் அழும் வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

Recommended Video

    என் மக்களை விட முடியல- கண்ணீர் விட்ட அழுத Pondy MLAs | Oneindia Tamil

    புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது.. என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அந்தந்த கட்சியில் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்டவர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் கடந்த 2 முறை வில்லியனூர் தொகுதிகள் நின்று வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார்...

     வில்லியனூர்

    வில்லியனூர்

    ஆனால் 2 மாசத்துக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்த அதிருப்தியின் காரணமாக, அதுவும் ஆட்சி முடியும் தருவாயில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தொகுதியில் நின்றால் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் மாற்று தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிற்க முடிவு செய்து தனது ஆதரவாளர்களைத் திரட்டியும், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் வில்லியனூர் உள்ள தனது வீட்டில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்..

     மனஉளைச்சல்

    மனஉளைச்சல்

    அப்போது, "வில்லியனூர் தொகுதியிலிருந்து வெளியேறுவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.. மன உளைச்சலாகவும் இருக்கிறது.. அதுவும் உங்களை எல்லாம் பிரிந்து போவதை நினைத்தாலே என்னால தாங்க முடியவில்லை.. வருத்தமாக இருக்கு" என்று அழ ஆரம்பித்துவிட்டார். இதைகேட்ட தொண்டர்கள், "அண்ணே.. அண்ணே எங்கே போனாலும் நமச்சிவாயம் வாழ்கன்னுதான் சொல்லுவோம்.. ஏன் அழறீங்க? " என்று ஆறுதல் சொன்னார்கள்.

     என்ஆர் காங்கிரஸ்

    என்ஆர் காங்கிரஸ்

    இதேபோல் மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போது வரை எம்எல்ஏவாக இருப்பவர் டிபிஆர் செல்வம்.. இவருக்கு மண்ணாடிப்பட்டு தொகுதி திரும்பவும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் உள்ளதால் சில நிர்பந்தத்தின் காரணமாக பாஜகவை சேர்ந்த நமச்சிவாயத்திற்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

     செல்வம்

    செல்வம்

    இந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதி என்ஆர் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ டிஆர் செல்வம் தன்னுடைய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.. செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, "கடந்த 2 முறை, மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம்.. இப்பவும் எதிர்க்கட்சியா இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவங்ககிட்ட போய் கேட்டு வாங்கி வந்து அதை தந்திருக்கேன்.. ஆனால் இப்போது தனக்கு இந்த இந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை.. எனக்கு சீட் தராததுகூட பிரச்சனையா தெரியல.. என்னை நம்பி இருந்த ஜனங்களுக்குதான் என்ன சொல்றது?

     ரங்கசாமி

    ரங்கசாமி

    ரங்கசாமி ஐயா நான் மிகவும் நேசித்தவர்.. ஏன் இப்படி முடிவெடுத்தார்? மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்.. ஆனால், சதிகார கூட்டத்தில் மாட்டிக்கிட்டாரோ என்ற பயம் வந்துடுச்சு..ஏதோ ஒரு தீய சக்திக்கிட்ட மாட்டிக்கிட்டார்.. அதில் இருந்து மீண்டு வந்து புதுவை மாநில மக்களை அவர் பாதுகாக்கணும்.. அவர் எந்த முடிவெடுத்தாலும், நாங்க உறுதுணையா இருப்போம்" என்றார். தொகுதி மாறி மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட உள்ளவரும், தொகுதியிலிருந்து கடந்த முறை வெற்றி பெற்றவரும் அவரவர் நிர்வாகிகளிடையே தனித்தனியாக கதறி அழுதது கண் கலங்க வைக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+