புதுச்சேரி அரசியலில் களமிறங்கிய மார்ட்டின் மகன்! ’லட்சிய ஜனநாயக கட்சி’யை தொடங்கிய சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி: தமிழக அரசியலைப் போலவே புதுச்சேரி அரசியலிலும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் கால் பதிக்க நினைக்கும் நிலையில் புதிய கட்சி ஒன்று உருவாகி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் உறவினரும், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் "லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
தமிழகத்தைப் போலவே 2026 ஆம் ஆண்டு புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் பாஜக- என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு போட்டியாக புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் திமுக கூட்டணி அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் நிலை தமிழக வெற்றிக்கழகத்தின் வரவு பல்வேறு கூட்டணி கணக்குகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர் தான்.

புதுச்சேரி அரசியல்
புஸ்ஸி தொகுதியில் அவர் எம்எல்ஏவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா பார்வையும் புதுச்சேரி பக்கமே இருக்கிறது. காரணம் அவரது மாமனாரும் பிரபல லாட்டரி அதிபருமான சாண்டியாகோ மார்ட்டின் புதுச்சேரியில் தான் இருக்கிறார். அவரது மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும் புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
ஏற்கனவே ஜேசிஎம் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு உதவுவது, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சார்லஸ் மார்ட்டின் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.
புதிய கட்சி
புதிய கட்சி ஆரம்பித்து தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்திருக்கிறார்.
-
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்!












Click it and Unblock the Notifications