அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானம்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
புதுச்சேரி: புதுவை துத்திப்பட்டு கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள புதுச்சேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்தத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியாச்சின் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து, அதில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டியுள்ளதாகக் கூறி, புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கிராம மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்திய புதுவை நகரமைப்புத் துறை செயலாளர் அளித்த அறிக்கையில் ஸ்டேடியம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவும் பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு இடத்தில் இருந்து வெளியேறும்படி சியாச்சின் நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த உத்தரவை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications