பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500.. புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதேபோல, உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரத்தில் 3 நாள்கள் வழங்கப்படும் முட்டை, இனி வாரம் முழுவதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் துணை நிலை ஆளுநரின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, புதுச்சேரி அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டப் பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி இன்று காலை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடி மதிப்பில் புதுவையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும். அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும்-முதலமைச்சர் ரங்கசாமி.
6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழப்பு ஈமச்சடங்கு தொகை ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரமாக உயர்வு.
புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயத்தப்படும்.
மீனவ சமுதாய ஈமச் சடங்குகளுக்கான நிதி ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications