‛என் மனைவி கர்ப்பமா இருக்கா’.. அவக்கிட்ட சொல்லாதீங்க.. உயிர்போகும் முன் ராணுவ வீரர் கூறிய வார்த்தை
காரைக்கால்: என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அவக்கிட்டா சொல்லாதீங்க எனக்கூறி காரைக்கால் ராணுவ வீரர் ரத்த வாந்தி எடுத்து மறைந்த சம்பவம் கண்களை கலங்க வைக்கிறது.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த போலகம் கிராமம் வீரன்குடி தெருவை சேர்ந்தவர் பிரேம் குமார். இவருக்கு வயது 32. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய திபெத் எல்லைக் காவல்படையின் 47வது படை பிரிவில் காவலராக சேர்ந்தார்.

இவருக்கு செவ்வந்தி என்ற மனைவியும், கீர்த்தி என்ற 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். செவ்வந்தி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த பிரேம்குமார் வந்தபோது மனைவி, மகனை வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.
மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் அவர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இந்தியா சீனா எல்லையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா, சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இறந்தார். அதாவது திடீரென்று மயக்கமடைந்த பிரேம் குமார் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கூட அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து வீரர் பிரேம்குமார் உடல் விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு திருப்பட்டினம் பகுதியில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு இன்று அவரது உடல் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் பிரேம் குமார் இறப்பதற்கு முன்பு மனைவி பற்றி கூறிய வார்த்தைகள் கலங்க வைக்கின்றனர். இதுபற்றி அவரது மனைவி செவ்வந்தி கூறியதாவது: வழக்கமாக தினமும் எனது கணவர் என்னிடம் செல்போனில் பேசுவார். அப்படித்தான் அன்று இரவு 8 மணிக்கு (அதாவது கடந்த மாதம் 30ம் தேதி) போன் செய்தார். அதன்பிறகு இரவு 9.40க்கு போன் செய்தார். சாப்டியா, தம்பி (அதாவது மகன்) சாப்பிட்டானா? என கேட்டார். வீடியோ காலும் பேசினார்.
மேலும் இரவு 12 மணிக்கு பணியில் இருந்து இறங்கிவிடுவேன் எனக்கூறினார். ஆனால் அவர் இரவு 12 மணிக்கு இறந்துள்ளார். அவர் இறந்தது எனக்கு தெரியாது. பட்டணம் ஸ்டேஷனில் இருந்து எனது அம்மாவுக்கு போன் வந்தது. ரமணியா நீங்கள். உங்கள் மகள் பெயர் செவ்வந்தியா? உங்களின் மருமகன் பிரேம் குமாரா? என கேட்டுவிட்டு சம்பவத்தை கூறியுள்ளனர்.
முன்னதாக என் கணவருக்கு அவர் சாகப்போவது தெரிந்துள்ளது. இதனால் ‛என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அவக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க’ எனக்கூறியுள்ளார். இதனால் ஸ்டேஷனில் இருந்து பேசியவர்கள் என்னிடம் சொல்ல வேண்டாம். வேறு யாரிடமாவது சொல்லுங்கள் என தாயிடம் கூறியுள்ளனர்.
என் கணவர் அங்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். 2 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார். என் புருஷன் என்னை அப்படி வைச்சிப்பார். நாங்க ஜம்முவில் 47 வது பட்டாலியனில் தான் இருந்தோம். கர்ப்பமாக இருந்ததால் தான் என்னை இங்கு விட்டுவிட்டு சென்றார். இல்லைனா நான் என் செல்லத்தை பிரிந்து இருக்கமாட்டேன். என் தங்கத்தை பிரிந்து வந்திருக்க மாட்டேன். இங்கிருந்து 5 மாதத்தில் மீண்டும் அங்கு போய்விடுவேன் என்று தான் நான் நினைத்தேன்.
செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 30ம் தேதி) காலை 3.40 மணிக்கு பட்டணம் ஸ்டேஷனில் இருந்து செய்தி வந்துவிட்டது. என் சொந்தம் பந்தம் எல்லாம் வந்தார்கள். என் அக்காள், தங்கை, அக்காளின் கணவர் மாமா என அனைவரும் வந்துவிட்டனர். அவர்களுக்கு நியூஸ் தெரிந்து இருக்கு. ஆனால் என்கிட்ட சொல்லவே இல்லை. என் கணவர் நன்றாக இருப்பதாக மாமா கூறினார்.
என் கணவர் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு 5வது பட்டாலியனில் இருந்தார். நான் செல்போனை எடுத்து பார்த்தபோது அந்த பட்டாலியனில் இருக்கும் அண்ணன்கள் ஸ்டேட்டஸ் வைத்திருந்தனர். அப்போது தான் எனக்கு தெரியும். என் கணவர் நாட்டுக்காக உயிரை விட்டு இருக்கிறார். எனக்கு சந்தோஷம் தான். எனக்கு ஒரு பையன் இருக்கிறார். எனக்கு ஒரு வேலை மட்டும் கொடுத்தால் போதும்.. வேறு எதுவும் வேண்டாம்’’ என கண்ணீருடன் கூறி கலங்க வைத்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications