புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரி மாநிலம்.. ராகுல் காந்திக்கு நன்றி.. நாராயணசாமி நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்திக்கு நன்றி.. நாராயணசாமி நெகிழ்ச்சி

    புதுச்சேரி: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், ராகுல்காந்தி புதுச்சேரி மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என ராகுல்காந்தி கூறியருப்பதன் மூலம் அவர் புதுச்சேரி மக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

    Narayanasamy tahnsk Rahul Gandhi

    இதற்கு புதுச்சேரி மக்கள் சார்பில் ராகுல்காந்திக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆஹா பிரமாதம்! கிடைச்சாச்சு வெற்றி....காங். தேர்தல் அறிக்கைக்கு ஸ்டாலின் பாராட்டு ஆஹா பிரமாதம்! கிடைச்சாச்சு வெற்றி....காங். தேர்தல் அறிக்கைக்கு ஸ்டாலின் பாராட்டு

    ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளதன் மூலம், நாட்டில் வறுமை ஒழியும், பட்டினி என்ற நிலையே இருக்காது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்தமாக தென் மாநிலங்களை புறக்கணிக்கிறார் என்பதால் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார் என்றார் நாராயணசாமி.

    English summary
    Puducherry CM Narayanasamy has thanked Rahul Gandhi for announcing a happy news to the UT people on the statehood issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X