புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்.. களை கட்டியது புதுச்சேரி.. கடற்கரை சாலையில் குவியும் மக்கள்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க கடற்கரை சாலையில் ஏராளமான சுற்றுலா பயனிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். அனைவரும் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிப்பட்டு வருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழு அளவில் தயாராகியுள்ளது. சுற்றுலா பயணியர் திரண்டு வருகின்றனர்.

New Year 2021: Puducherry has a large number of tourists on beach road to welcome new year

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டத்தத்தின் போது கடற்கரை சாலையில் 10,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வைட் டவுன் பகுதிகளில் இன்று மதியம் 2 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணி வரை வாகன போக்குவரத்துக்கு புதுச்சேரியில் தடைவித்திக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்ட கடற்கரை சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தற்போது இருந்தே வர தொடங்கி உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே கடற்கரைக்கு வருகின்றனர். கடற்கரைக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயனிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

English summary
Puducherry has a large number of tourists and the general public on the beach road to welcome the New Year. All are admitted only after heat testing. The Puducherry Coast Road is flooded with people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X