கல்லூரியில் படிக்க கட்டணம் செலுத்த இயலாத கணவன்.. தூக்கில் தொங்கிய புதுப்பெண்.. புதுவையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரியில் கல்லூரியில் படிக்க கட்டணம் கட்ட கணவன் பணம் தராததால் திருமணமான 10 மாதத்தில் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(48). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தேவிகா (20).

கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு தேவிகா வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புகார்

புகார்

இந்த நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேவிகா அதிகாலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்து பார்த்தபோது தேவிகா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

கல்லூரி கட்டணம்

கல்லூரி கட்டணம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவிகா தனது படிப்பிற்கு கல்லூரி கட்டணம் கட்ட தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார்.

தேவிகா தற்கொலை

தேவிகா தற்கொலை

ஆனால் கணவர் பாலமுருகனால் பணம் கொடுக்கமுடியவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேவிகா தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+