இளநீர் கடை கிட்ட.. வண்டியை ஓரங்கட்டிய நிர்மலா சீதாராமன்.. அதைவிடுங்க.. நிதியமைச்சரை பாராட்டிய டீச்சர்
புதுச்சேரி: நிர்மலா சீதாராமனை புகழ்ந்து பேசியிருக்கிறார் அவரது பள்ளி ஆசிரியர்.. நிதியமைச்சரின் பள்ளி ஆசிரியர் பேச்சும், நிதியமைச்சர் சாலையோர வியாபாரிகளை சந்தித்து உரையாடியதும், பலரது கவனத்தை உற்றுகவனிக்க வைத்து வருகிறது. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புதுச்சேரியில், "பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024" கடந்த 21-ம் தேதி ஆரம்பித்தது.. இந்த விழாவை ஆளுநர் ஆ.என். ரவி துவக்கி வைத்தார்.. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வரிகள்: அப்போது பேசிய நிர்மலா சீத்தாராமன், "வரி தொடர்பாக என்னிடம் இன்னும் 7 நாட்களுக்கு பேசாதீர்கள்.. இல்லை என்றால் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்..
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சமூக சூழல் நன்றாக அமைய வேண்டும்... நமக்கு அனுபவம் வாய்ந்த பிரதமர் கிடைத்துள்ளார். அதனடிப்படையில் நம்முடைய நாட்டில் உள்ள பொருளாதாரம் அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இப்போது செயல்படுத்தப்படுகிறது. இப்போது ஊழலற்ற நிர்வாகம் தொடர்ந்து சாத்தியமாகி வருகிறது. அனைத்து திட்டங்களும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
நிர்வாகம்: ஒப்பந்தம் கோரும் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தவறுகளுக்கு இடமில்லாமல் நிர்வாகம் நடைபெறுகிறது. நல்ல குடிநீர், சுகாதார காப்பீடு திட்டம், கல்வி உள்ளிட்ட பலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த முடிகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமாக செலவிடப்படுகிறது என்பது பல்வேறு விஷயங்களை நிர்மலா சீதாராமன் தன்னுடைய பேச்சின்போது எடுத்துரைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளி ஆசிரியை (தற்போது ஓய்வு ஆசிரியர்) சபீதா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது நிர்மலா சீதாராமன் ஆசிரியை காலில் விழுந்து ஆசி பெற்றார்.
ஆசிரியர்கள்: பிறகு முன்னாள் ஆசிரியர் சபிதா சொல்லும்போது, "கடந்த, 1974-76ம் ஆண்டு காலகட்டத்தில், திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில், நான் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.. அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்தார். நான் அவருக்கு சமூக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களை சொல்லி தந்தேன்..
அவர் அப்போதே, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை பெற்றிருக்கிறார்.. ஒரு வினாடி - வினா போட்டியில், "மிசா" குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளி மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு, சரியான பதில் அளித்த ஒரே மாணவி, நிர்மலா சீதாராமன் மட்டுமே.
பள்ளிக்காலம்: அவர் பதில் சொன்னதற்கு முதல் நாள் தான், அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது... அந்த விஷயமும், அன்றைய நாள் காலையில் செய்தித்தாளில்தான், வெளியாகி இருந்தது. அந்தளவிற்கு பள்ளிக்காலத்திலேயே, பொது அறிவில் சிறந்து விளங்கியவர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று பூரித்து சொன்னார்.
இந்த புகைப்படம் விழா முடிந்ததுமே, தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்.. கடற்கரை சாலை அருகில் காரில் செல்லும்போது, சாலையோரம் இளநீர், துணிப்பை வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களை கண்டார்.
வாகனம்: உடனே வாகனத்தை நிறுத்த சொல்லி, காரிலிருந்து இறங்கி சாலையில் நடந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இளநீர், துணிப்பை வியாபாரம் செய்யும் பெண்களை சந்தித்து பேசினார்.. அவர்களுடன் சேர்ந்து போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார்.இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications