இன்று புதுச்சேரி அன்று கோயம்புத்தூர்.. சிறுமியை சூறையாடியவனை சல்லடையாக்கிய போலீஸ் துப்பாக்கிகள்
புதுச்சேரி: பால் மணம் மாறாத பச்சிளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சிறுமியை சீரழித்தவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். கொலையாளிகளுக்கு ஒரு வாரத்தில் தண்டனை பெற்றுத்தருவோம் என்று உறுதி அளித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் பதற வைத்துள்ளது போல கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் 11வயது சிறுமியை சீரழித்த கயவனை துப்பாக்கியால் சல்லடையாக துளைத்து தண்டனை தரப்பட்ட சம்பவம் பலருக்கும் நினைவிற்கு வந்து போகிறது.
போதை தலைக்கேறிய உடன் குழந்தையை கூட காம எண்ணத்தோடு பார்க்கின்றனர். நாடு முழுவதும் எத்தனையோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி நிர்பயா பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.

அதற்கு முன்னதாக கோவையில் 11 வயது பச்சிளம் சிறுமியை கால் டாக்சி டிரைவர் ஒருவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின் சங்கீதா தம்பதியின் குழந்தைகள்தான் கயவர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
முஸ்கின் ஜெயின் என்ற 11 வயது மகளும், ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு கால் டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இருவரையும் கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் கடத்தி சென்றான்.
சிறுமி முஸ்கினை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான் அந்த காமக்கொடூரன். சிறுமி முஸ்கினின் தம்பி ரித்திக்கையும் கொலை செய்தான் டிரைவர் மோகன்ராஜ். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்றும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர்.
அப்போது கோவை மாநகர ஆணையராக இருந்த சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கைதான் உடனடியாக தண்டனை கிடைக்க காரணமாக இருந்தது. சிறுமியை சீரழித்த மோகன்ராஜையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் கைது செய்தனர். கோர்ட் கேஸ் என்று பல ஆண்டு காலம் இழுத்தடிக்கவில்லை.
காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற மோகன்ராஜை துப்பாக்கியால் சல்லடையாக துளைத்தனர். சிறுமியை சீரழித்து கொன்றதோடு சிறுவனையும் கொன்ற மோகன்ராஜ் 15 நாட்களுக்குள் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்தது திமுக ஆட்சி காலத்தில் அப்போது முதல்வர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
அதே போல ஒரு படுபாதக செயல் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் இரண்டாவது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தீவிரமாகத் தேடினர்.
சோலை நகர் பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தூக்கு தண்டனை தர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒரே வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று உறுதியாக கூறியுள்ளார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே பாலியல் குற்றவாளிகளுக்கு பாடமாக அமையும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications