மசாஜ் சென்டர்களில் விபசாரம்.. 9 பேர் கைதில் திடீர் திருப்பம்.. பரபரக்கும் புதுவை!
புதுவை: புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் விபசாரம் நடந்து வந்ததாத தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த வாரம், முதுநிலை காவல் கண்கானிப்பாளர் லோகேஷ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் நகர பகுதியில் மூன்று மசாஜ் செண்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விபசாரம் நடத்தி வந்த உரிமையாளர்கள் 5 பேர் வாடிக்கையாளர்கள் 4 பேர் என 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

மசாஜ் சென்டர்
இந்நிலையில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள் மறைமலை அடிகள் சாலை, அண்ணா நகரில் விபசாரம் நடைபெற்ற மசாஜ் செண்டர்களை புதுச்சேரி நகராட்சியின் வணிக உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி செயல்பட்டதாக மசாஜ் செண்டர்கள் செயல்பட்ட கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர்.

ரத்து
மேலும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

வாக்குமூலம் அடிப்படையில்
அந்த இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விபச்சார வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பியூட்டி பார்லர்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த ஓரிரு வாரங்களில் பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டருக்கு வந்து சென்றவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பியூட்டி
இதில் 40 பேர் பியூட்டி பார்லருக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் மொபைல் எண்களை ஆய்வு செய்து தற்போது 40 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபசார வழக்கில் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications